ஈரானுக்கு ஆயுத ஏற்றுமதியைத் தொடங்கும் ரஷ்யா: பகிரங்கமாக சொன்ன ஒரு விடயம்

2 Min Read

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் போரிட்டு வரும் ஈரானுக்கு ட்ரோன், மருந்து மற்றும் உணவு உள்ளிட்டவைகளை ரஷ்யா அனுப்பி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் உதவியாக இருக்கும்

 

மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், போர் தொடங்கிய உடனையே ட்ரோன் ஏற்றுமதி தொடர்பான ரகசிய பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரானுக்கு ஆயுத ஏற்றுமதியைத் தொடங்கும் ரஷ்யா: பகிரங்கமாக சொன்ன ஒரு விடயம் | Russia Sending Drones To Iran

ரஷ்யா ஏற்கனவே ஈரானுக்கு செயற்கைக்கோள் படங்கள், இலக்குத் தரவுகள் மற்றும் உளவு அமைப்புகளின் ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது ட்ரோன்கள் ஏற்றுமதி செய்வது என்பது, உயிர் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய முதல் உதவியாக இருக்கும் என்றே கூறுகின்றனர்.

ஆனால், ஈரான் போரில் தாங்கள் தலையிடவில்லை என்றே ரஷ்யா கூறி வருகிறது. இருப்பினும் மனிதாபிமான உதவிகளின் அவசியத்தை வலியுறுத்திய ரஷ்யா, அஜர்பைஜான் வழியாக ஈரானுக்கு 13 டன்களுக்கும் அதிகமான மருந்துகளை அனுப்பியுள்ளதாகவும், தொடர்ந்து அனுப்பும் என்றும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது.

ஆனால், ஜெரான்-2 மற்றும் ஷாஹெத்-136 ட்ரோன் உள்ளிட்ட, ரஷ்யா அனுப்பக்கூடிய ட்ரோன்களின் வகைகளில் வரம்புகள் இருக்கும் என்றே பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரானுக்கு ஆயுத ஏற்றுமதியைத் தொடங்கும் ரஷ்யா: பகிரங்கமாக சொன்ன ஒரு விடயம் | Russia Sending Drones To Iran

போர் முடிவுக்கு வரும்

இரு நாடுகளும் கடந்த ஆண்டு பரஸ்பர பாதுகாப்புக்கான உறுதிமொழியை உள்ளடக்காத ஒரு உத்திசார் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டன. ட்ரோன்களை அனுப்புவதாக வெளியான தகவலை இதுவரை ரஷ்யா மறுக்காத நிலையில்,

பொய்யான பல தகவல்களும் பரவுவதாக குறிப்பிட்டுள்ள டிமித்ரி பெஸ்கோவ், ஒன்று மட்டும் உண்மை நாங்கள் ஈரானுடம் தொடர்ந்து பேசி வருகிறோம் என்றார்.

ஈரானுக்கு ஆயுத ஏற்றுமதியைத் தொடங்கும் ரஷ்யா: பகிரங்கமாக சொன்ன ஒரு விடயம் | Russia Sending Drones To Iran

இதனிடையே, போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தற்போது தென்படவில்லை என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றே வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, ஈரான் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்றும் முதன்மை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்காவின் இலக்குகள் தொடர்ந்து குறிவைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *