அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் – உளவுத்துறை எச்சரிக்கை

1 Min Read

பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு அணு ஆயுத அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தலாக உள்ள பாகிஸ்தான்

அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கபார்ட், 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையை செனட்டில் சமர்ப்பித்தார்.

அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை | Us Intel Warns Pakistan Will Nuclear Threat To Us

இதில், ரஷ்யா, சீனா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளுடன் இணைந்து பாகிஸ்தானும் அமெரிக்காவிற்கு அணு ஆயுத அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் விரைவில் அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBM) உருவாக்கக்கூடும்.

கடந்த காலங்களில் இந்தியா பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால், அணு ஆயுத மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.

ட்ரம்ப்பின் தலையீட்டாலே இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம் முடிவுக்கு வந்தது. இருந்தாலும் பயங்கரவாத அமைப்புகளால் புதிய நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

அமெரிக்காவிற்கு எதிராக ஏவுகணைகள்

அமெரிக்க ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவிச் செல்லவோ அல்லது கடந்து செல்லவோ திறன் கொண்ட மேம்பட்ட ஏவுகணை செலுத்தும் முறைகளை சீனாவும் ரஷ்யாவும் உருவாக்கி வருகிறது.

வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளால் ஏற்கனவே அமெரிக்க மண்ணை அடைய முடியும், மேலும் அது தனது அணு ஆயுதக் களஞ்சியத்தை விரிவுபடுத்துவதில் உறுதியாக உள்ளது.

ரஷ்யா மற்றும் சீனாவுடன் தனது உறவுகளை வடகொரியா மேம்படுத்தி வருவதால் இந்த மாறிவரும் கூட்டணி உலகப் பாதுகாப்பிற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை | Us Intel Warns Pakistan Will Nuclear Threat To Us

அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளின் எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கை, 2025 அம ஆண்டில் 3,000 ஆக இருந்தது. இது 2035 ஆம் ஆண்டில் 16,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அமெரிக்கா நடத்திய மிட்நைட் ஹேமர் நடவடிக்கையின் விளைவாக, ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அதன் பிறகு, அவர்களின் செறிவூட்டல் திறனை மீண்டும் கட்டியெழுப்ப எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *