பிரான்சில் கால்நடைகளுக்கு, lumpy skin disease என்னும் நோய் பரவிவருகிறது.
அந்நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, ஏராளமான மாடுகளைக் கொல்ல பிரான்ஸ் அரசு முடிவு செய்ய, அதற்கெதிராக விவசாயிகள் போராட்டங்களில் இறங்கினார்கள்.
கால்நடைகளுக்கு தடுப்பூசி போட ராணுவம்
இந்நிலையில், மாடுகளுக்கு lumpy skin disease நோய்க்கு எதிராக தடுப்பூசி போட ராணுவத்தை களமிறக்கியுள்ளது பிரான்ஸ் அரசு. .
ஆயிரக்கணக்கான தடுப்பூசிகளுடன் தெற்கு பிரான்சுக்கு பறந்துள்ள ராணுவ வீரர்கள், சுமார் 750,000 மாடுகளுக்கு தடுப்பூசி அளிப்பதில் உதவ இருக்கிறார்கள்.
ஒரு மாதத்திற்குள் இந்த தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றி முடிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.



