கடந்த வாரத்தில் மட்டும் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் ரூ. 408 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு–கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றில் மொத்தம் 1,095,895 வாகனங்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 5 நாள் விடுமுறைக் காலத்தில் மட்டும் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ரூ.355 மில்லியனுக்கும் அதிகமான சாதனை வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.




