மரடோனா கையால் கோல் பெற்ற பந்து விலைபோனது

1 Min Read

ஆர்ஜன்டீன முன்னாள் கால்பந்து ஜாம்பவான் டியானோ மரடோனா 1986 பிஃபா உலகக் கிண்ணப் போட்டியில் பிரபலமான கையால் தட்டி கோல் பெற்ற பந்து 3.35 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது. இந்த அடிடாஸ் அஸ்டெகா பந்து 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதியில் பயன்படுத்தப்பட்டது. அந்தப் போட்டியில் மரடோனா கையால் போட்ட சர்ச்சைக்குரிய கோல் மூலம் ஆர்ஜன்டீனா 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

இந்தப் பந்து அமெரிக்காவின் டலாஸ் நகரில் கடந்த சனிக்கிழமை (22) ஏலத்திற்கு வந்தது. 10 மில்லியன் டொலர் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே அது 3.35 டொலர்களுக்கு விலைபோயுள்ளது. மேற்படி போட்டியில் மத்தியஸ்தராக இருந்த துனீஷியாவின் அலி பின் நாசர் 36 ஆண்டுகளாக இந்தப் பந்தை தன்னிடம் வைத்திருந்த நிலையில் 2022 இல் லண்டன் ஏலத்தில் 2.37 மில்லியன் டொலருக்கு விற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் மரடோன அணிந்த ஜெர்சி 2022 இல் 9.3 மில்லியன் டொலருக்கு விலைபோயிருந்தது. எனினும் எந்தவொரு விளையாட்டிலும் அதிக விலைபோன பந்து என சாதனை படைக்க இந்தப் பந்து தவறியுள்ளது. 2024 மேஜர் லீக் போட்டியில் பேஸ்போல் பந்து ஒன்று 4.392 மில்லியன் டொலருக்கு  விலைபோனதே சாதனையாக உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *