தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி: மருத்துவர்கள் காத்திருந்த அதிர்ச்சி

1 Min Read

சீனாவில் 5 வயது சிறுமி தங்கக் கட்டியை விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

5 years old girl swallows gold bar in china: சீனாவின் வடக்குப் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி தவறுதலாக அங்கிருந்த 4 சென்டிமீட்டர் நீளமும் 50 கிராம் எடையும் உள்ள சிறிய தங்கக் கட்டியை விழுங்கியுள்ளார்.

இதனை உடனடியாக தன்னுடைய பெற்றோரிடம் அந்த சிறுமி தெரிவித்ததை அடுத்து, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.

தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி: மருத்துவர்கள் காத்திருந்த அதிர்ச்சி | 5 Years Old Girl Swallows Gold Bar In China

ஆனால் அங்கு போதுமான நவீன உபகரணங்கள் இல்லாததை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கேப்பிட்டல் மெடிசின் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.அப்போது சிறுமியின் வயிற்றை எக்ஸ்-ரே செய்து பார்த்த போது சுமார் 4 செ.மீ நீளமுள்ள தங்க கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் அந்த தங்க கட்டியானது சிறுமியின் வயிற்றின் உள்சவ்வை கீறி, கடுமையான உள் ரத்தப்போக்கை மற்றும் உறுப்புகளின் துளைகளை ஏற்படுத்தும் அபாயத்துடன் இருந்துள்ளது.

அத்துடன் அந்த தங்க கட்டி அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுப்பதற்கு சிக்கலான இரைப்பை குழியில் சிக்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இறுதியில் எண்டோஸ்கோபி செய்து சுருக்குக் கயிற்றின் உதவியால் தங்க கட்டியை மீட்டு கவனமாக இரைப்பை குழியிலிருந்து வெளியே எடுத்துள்ளனர்.

தற்போது அந்த சிறுமி குணமடைந்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *