இரு தரப்பு உறவை வலுப்படுத்த சவுதி-சூடான் புரிந்துணர்வு ஒப்பந்தம்

1 Min Read

இரு தரப்பு நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்புக் கவுன்சிலை ஸ்தாபிக்கவென புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சவுதி அரேபியாவும் சூடானும் நேற்று முன்தினம் கைச்சார்த்திட்டுள்ளன.

சவூதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹானும் சூடானின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் மொஹி எல்-தின் சலேம் இப்ராஹிமும் ரியாத் நகரில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் அளவை மேம்படுத்துவதிலுள்ள ஆர்வத்தை இந்த கவுன்சில் உருவாக்கம் வெளிப்படுத்தி நிற்கிறது என்று சவுதி தெரிவித்துள்ளது.

இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஒரு பயனுள்ள தளமாகச் செயல்படவும், தெளிவான முன்முயற்சிகள், திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் மூலம் உறுதியான விளைவுகளை அடைவதற்காக இரு தரப்பிலிருந்தும் தொடர்புடைய அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு கட்டமைப்பாகவும் இந்த கவுன்சில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் சவுதி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் சவூதி-சூடான் ஒருங்கிணைப்புக் கவுன்சிலின் முன்னுரிமைகள் உள்ளன என்று சூடானின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில் இருநாட்டு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்குமான வழிகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *