தனியார் அணு மின்சக்தி உற்பத்திக்கு, கடுமையாகக் கண்காணிக்கப்படும் ஒப்புதல் முறைமையை இந்தியா முன்மொழிந்துள்ளது. இதன் ஊடாக, உறுதிப்படுத்தப்பட்ட செயல்திறன் மிக்க வெளிநாட்டு அணு உலைத் தொழில்நுட்பங்களுக்கு வழி திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய அணுசக்திச் சந்தைகளுக்கு அமைய, கட்டுப்பாடுகளைத் தக்க வைத்துக்கொண்டு, கடுமையாகப் பாதுகாக்கப்பட்ட இத்துறையைத் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எவ்வாறு திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தெளிவான வரைவு விதிகளும் ஒழுங்குமுறைகளும் இந்தியாவினால் ளெியிடப்பட்டுள்ளன.
அணுசக்திச் சட்டத்தின் கீழான வரைவு விதிகளின்படி, நிறுவனங்கள் முறையான அனுமதிப் பத்திரத்தைப் பெற முன்னர் ஆரம்பகட்ட மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும், நிலத்தைப் பாதுகாக்கவும் கொள்கை ரீதியான ஒப்புதலை அளிக்க வேண்டும்.
இந்தியாவின் அணுசக்தித் தொழில் பெரும்பாலும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. எனினும் அனுமதிப்பத்திரம் மற்றும் மூலோபாய அணுசக்திப் பொருட்கள் மீதான கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டு, தனியார் நிறுவனங்கள் திட்டங்களை உருவாக்கவும் இயக்கவும் அனுமதிக்கும் வகையில் அணுசக்திச் சட்டம் கடந்தாண்டு திருத்தப்பட்டமை தெரிந்ததே.
ரொய்ட்டர்ஸ்




