பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு: கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

1 Min Read

இந்தோனேசியாவில் மலைப்பாம்பு ஒன்று பெண் ஒருவரை முழுமையாக விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தொழிலாளியை விழுங்கிய மலைப்பாம்பு

இந்தோனேசியாவின் ஜாம்பி மாகாணத்தில் 52 வயது ஜஹ்ரா(Jahrah) என்ற பெண் மலை ரப்பர் தோட்டத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல தன்னுடைய வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது கிட்டத்தட்ட 16 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்றினால் அவர் முழுமையாக விழுங்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு: கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Giant Python Swallowed Woman Rubber Worker

கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஜஹ்ரா வேலை நேரம் முடிந்தும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் மத்தியில் கவலை அதிகரித்தது.

இதையடுத்து ரப்பர் தோட்டத்திற்கு சென்று பார்த்த அவரது கணவர், ஜஹ்ராவின் வேலைக் கருவிகளும், உடமைகளும் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக கிராம மக்களுடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் அவரது கணவர் இறங்கியுள்ளார்.

பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு: கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Giant Python Swallowed Woman Rubber Worker

திங்கட்கிழமை நகர முடியாமல் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று ஓய்வு எடுத்துக் கொண்டு இருப்பதை மலை கிராம மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த மக்கள், அந்த பாம்பை கொன்றுள்ளனர். அத்துடன் அந்த பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்த போது உள்ளே ஜஹ்ரா உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பாம்பின் வயிற்றில் இருந்த ஜஹ்ரா உடல் பெருமளவு சேதமடையாமல் அப்படியே இருந்ததாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியை சுற்றியுள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *