இலங்கைக்கு முதல் பதக்கம் வென்றார் பாலித்த பண்டார

1 Min Read

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இலங்கை சார்பில் முதல் பதக்கத்தை வட்டு எறிதல் பெரா வீரர் பாலித்த பண்டார வென்றுள்ளார். பெரா வட்டு எறிதல் போட்டியில் அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் பாலித்த பண்டார அதிகட்சம் 46.84 மீற்றர்களை எறிந்து 992 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை வென்றார். இது அவரது தனிக்கட்ட சாதனையாகவும் இருந்தது. இதன்போது முதல் முயற்சியிலேயே அவர் அதிக தூரத்தை எறிந்தமை குறிப்பிடத்தக்கது. பாலித்த பண்டார 2022 பெர்மிங்ஹாமில் நடைபெற்ற பொதுநலவாயவிளையாட்டுப் போட்டியிலும் இதே போட்டிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

வேல்ஸ் வீரர் அடேல் டேவிஸ் அதிகபட்சம் 48.38 மீற்றர் துரம் எறிந்து மொத்தம் 1020 புள்ளிகளை பெற்றதன் மூலம் தங்கப் பதக்கத்தை வென்றதோடு டிரினிடாட் மற்றும் டொபாகோவின் அகீம் ஸ்டுவர்ட் மொத்தம் 941 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை வென்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *