பிஃபா உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணி சர்வதேச கால்பந்து சம்மேளன தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.
நியூ ஜெர்சியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீன அணியை 1–0 என வீழ்த்தியே ஸ்பெயின் இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்றது. இதனையடுத்து பிஃபா தரைவரிசையில் முதல் இடத்தில் இருந்த ஆர்ஜன்டீன அணியை பின்தள்ளிய ஸ்பெயின் அணி கடந்த ஜனவரிக்கு பின்னர் முதல் முறை முதலிடத்திற்கு முன்னேறியது. ஆர்ஜன்டீன அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் உலகக் கிண்ண அரையிறுதியில் தோல்வியுற்ற பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களில் நீடிக்கின்றன. பிரேசில் மற்றும் மொரோக்கோ அணிகள் தலா ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 5 மற்றும் ஆறாவது இடங்களில் உள்ளன. இதன்படி மொரோக்கோ அணி பிஃபா தரவரிசையில் தனது சிறந்த தரநிலையை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




