கென்ட் பகுதியில் 7000 வீடுகளில் குடிநீர் விநியோக தடை: நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்

1 Min Read

கென்ட் பகுதியில் உள்ள சுமார் 7000 வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் மார்ட்டின் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் குடிநீர் தட்டுப்பாடு

பிரித்தானியாவின் கென்ட்(Kent) பகுதியில் கிட்டத்தட்ட 7000 வீடுகளுக்கு குடிநீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.

நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட கருவி கோளாறு காரணமாக இந்த தற்காலிக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கிடைத்துள்ள தகவல்களின் படி, Sandhurst, Pembury மற்றும் South Tunbridge wells ஆகிய பகுதிகளில் தற்காலிக குடிநீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.

கென்ட் பகுதியில் 7000 வீடுகளில் குடிநீர் விநியோக தடை: நாடாளுமன்ற உறுப்பினர் தகவல் | 7000 Homes In Kent Affected In Water Outage7000 வீடுகளுக்கு குடிநீர் விநியோகத் தடை ஏற்பட்டு இருப்பதாக சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 8000 ஆக இருக்கலாம் என்று உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் மார்ட்டின் தகவல் தெரிவித்துள்ளார்.

குடிநீர் தடையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக டன்பிரிட்ஜ் வெல்ஸில் உள்ள பெம்புரி சாலையில் இருக்கும் Tesco சூப்பர் ஸ்டோரில் இலவச குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் மற்றொரு குடிநீர் விநியோக மையமும் விரைவில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *