சிறைகளை சுற்றி முதலைகள்..! இனி கைதிகள் யாரும் தப்பிக்க முடியாது: இஸ்ரேலின் அதிரடி நடவடிக்கை

1 Min Read

சிறைக் கைதிகள் தப்பிக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பிற்காக சிறைகளை சுற்றி முதலைகளை பயன்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.

சிறைகளை பாதுகாக்க முதலைகள்

இஸ்ரேலிய ஊடகங்கள் வழங்கிய தகவலின் படி, தெற்கு இஸ்ரேலிய பகுதியில் அமைந்துள்ள ketziot சிறைச்சாலையில் பாலஸ்தீன சிறை கைதிகளை கண்காணிக்க முதலைகளை பயன்படுத்துவது குறித்து அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் கிவிர் திட்டமிட்டு வருகிறார்.

சிறைகளை சுற்றி முதலைகள்..! இனி கைதிகள் யாரும் தப்பிக்க முடியாது: இஸ்ரேலின் அதிரடி நடவடிக்கை | Israel Plan To Use Crocodiles In Prison Security

புளோரிடாவில் அகதிகள் தடுப்பு முகாமை சுற்றி அத்துமீறல்கள் நடைபெறுவதை தடுக்க முதலைகள் பயன்படுத்தப்பட்டதை முன்மாதிரியாக வைத்து இந்த திட்டம் திட்டமிடப்பட்டு வருகிறது.

சிறைச்சாலைகளில் முதலைகளை பயன்படுத்தும் திட்டத்தை அமைச்சர் பென் கிவிர் தீவிரமாக ஆதரித்து வருகிறார்.

இது தொடர்பாக அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், AI-ஆல் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் அவர் சங்கிலியால் கட்டப்பட்ட முதலையுடன் நடந்து வருவது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது.

மேலும், யாரும் சிறையில் இருந்து தப்பிச் செல்ல விரும்புகிறீர்களா? மீண்டும் ஒரு முறை யோசியுங்கள் என்ற எச்சரிக்கை வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.

சட்டத் திருத்தம்

சிறைகளை சுற்றி முதலைகள்..! இனி கைதிகள் யாரும் தப்பிக்க முடியாது: இஸ்ரேலின் அதிரடி நடவடிக்கை | Israel Plan To Use Crocodiles In Prison Security

இந்நிலையில் இஸ்ரேலின் சுற்றுச்சூழல் அமைச்சர் இதித் சில்மன், முதலைகளை “காட்டு விலங்குகள்’ பட்டியலில் இருந்து “வளர்க்கப்படும் காட்டு விலங்குகள்” (cultivated wild animals) பட்டியலுக்கு மாற்றியுள்ளார்.

இந்த மறு வகையீடு இஸ்ரேலிய சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பணிகளில் முதலைகள் பயன்படுத்தப்படுவதை அங்கீகரிக்கும் சட்டரீதியான வழிவகையை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் மாதம்  பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் கிவிர் முன்மொழிந்த யோசனைகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *