ஏழாயிரத்தை நெருங்கும் சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று: தவிர்க்கவேண்டிய உணவுகள் எவை?

1 Min Read

அமெரிக்காவில், சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏழாயிரத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவுவதை தவிர்க்க, எந்தெந்த உணவுகளைத் தவிர்க்கவேண்டும் என்பது குறித்து மருத்துவர் ஒருவர் ஆலோசனை கூறியுள்ளார்.

சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று

சைக்ளோஸ்போரியாசிஸ் என்பது, சைக்ளோஸ்போரா என்னும் கிருமியால் ஏற்படும் தொற்று ஆகும்.

ஏழாயிரத்தை நெருங்கும் சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று: தவிர்க்கவேண்டிய உணவுகள் எவை? | What To Avoid Eat Amid Cyclosporiasis Outbreak

உணவு மற்றும் குடிநீர் வழியாக மட்டுமே பரவும் இந்த சைக்ளோஸ்போரா என்னும் கிருமி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம், வாயுத்தொல்லை மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.

தவிர்க்கவேண்டிய உணவுகள் எவை?

இந்நிலையில், அமெரிக்காவின் மிகப்பெரிய ஊடகமான PEOPLE Inc. என்னும் ஊடக நிறுவனத்தின் தலைமை மருத்துவ அலுவலரான Dr. சோஹாயிப் இம்தியாஸ் (Dr. Sohaib Imtiaz), சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவுவதை தவிர்க்க கீழ்க்கண்ட உணவுகளை தவிர்க்குமாறு ஆலோசனை கூறியுள்ளார்.

ஏழாயிரத்தை நெருங்கும் சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று: தவிர்க்கவேண்டிய உணவுகள் எவை? | What To Avoid Eat Amid Cyclosporiasis Outbreak

லெட்டூஸ் (Lettuce) என்னும் காய்கறி மூலமாகவே தற்போது இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவியுள்ளதாக கருதப்படும் நிலையில், பேக் செய்யப்பட்ட லெட்டூஸ், சாலட்களைத் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அத்துடன், ஏற்கனவே துண்டுகளாக வெட்டி பார்சல் செய்யப்பட்டுள்ள பழங்கள், காய்கறிகள், Snow Peas என்னும் பட்டாணி வகை, ராஸ்பெர்ரி பழங்கள், கொத்தமல்லிக் கீரை, மாம்பழம் ஆகியவை சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்றை பரப்பக்கூடும் என்று கூறியுள்ள Dr. இம்தியாஸ், வெங்காயத்தின் தோலில் கூட இந்த சைக்ளோஸ்போரா கிருமி இருக்கலாம் என்றும், வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதாலும் இந்த தொற்று பரவலாம் என்கிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *