நைஜீரிய ஜனாதிபதி அலுவலகத்தின் போலி நிறுவனத் தலைவர் கைது

1 Min Read

நைஜீவிய நாட்டு ஜனாதிபதியின் அலுவலகத்தில் அமைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போலி அரச நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல வாரங்களாகத் தலை மறைவாக இருந்த இந்த போலி நிறுவனத்தின் தலைவர் தென்மேற்கு மாநிலமான ஒசூன் மாநிலத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அபுஜாவிலுள்ள கூட்டாட்சி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் பிறப்பித்த பிடியாணையைத் தொடர்ந்து அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அவலுவலகத்தில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்புக் கவுன்சில் என்ற பெயரில் அரச நிறுவனமொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பணிப்பாளர் நாயகம் தாமே என்றும் கூறிவந்த நபரான அடேனாயி அடேயெமி மேத்யூ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணம் தயாரித்தல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை அந்நபர் எதிர்கொண்டுள்ளார். ஜனாதிபதி போலா தினுபு, இப்போலி நிறுவனம் குறித்து ஊழல் விசாரணைக்கு உத்தரவிட்டதிலிருந்து, இவ்வழக்கு நைஜீரியாவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. பி.பி.சி நியூஸ்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *