ஆறு, ஏரிகளில் குளிப்பவர்களுக்கு சுவிஸ் அதிகாரிகளின் எச்சரிக்கை செய்தி

1 Min Read

சுவிஸ் மாகாணமொன்றில், ஆறு, ஏரிகளில் குளிப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள் அதிகாரிகள்.

ஆறு, ஏரிகளில் குளிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி

சுவிட்சர்லாந்தின் Fribourg மாகாண அதிகாரிகள், மாகாணத்திலுள்ள ஆறு, ஏரிகளில் தண்ணீர் மட்டம் குறைவாக இருப்பதும், வெப்பநிலை அதிகரித்துவருவதும், பாக்டீரியா பெருக சாதகமான சூழல் என்று தெரிவித்துள்ளார்கள்.

ஆறு, ஏரிகளில் குளிப்பவர்களுக்கு சுவிஸ் அதிகாரிகளின் எச்சரிக்கை செய்தி | Swiss Officials Warns In Bath For Lakes Rivers

ஆகவே, மக்கள் அனுமதிக்கப்பட்ட கடற்கரைகளில் மட்டுமே குளிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.கடற்கரைகளில் உள்ள தண்ணீரின் தரம் முறைப்படி தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், ஆறு, ஏரிகளில் அப்படி இல்லை.

ஆகவே, முறைப்படி தொடர்ச்சியாக பரிசோதனைக்குட்படுத்தப்படாத நீர் நிலைகளில் நீந்துவது உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக, எளிதில் பாதிக்கப்படும் தோல் உள்ளவர்கள், சிறுவர்கள் உட்பட, அத்தகைய ஆறு, ஏரிகளைத் தவிர்க்குமாறும், மற்றபடி ஆறு, ஏரிகளில் நீந்துபவர்கள், நீந்தி முடித்தபின் நல்ல தண்ணீரில் குளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *