2.3 கோடி லிற்றர் ரசாயன பால் விநியோகம்… கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல்

1 Min Read

இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், கடந்த ஆறு மாதங்களாக மக்கள் கலப்பட பாலை உட்கொண்டு வந்துள்ளார்கள் என்னும் அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கலப்பட பால்

இந்த கலப்பட பால் என்பது உண்மையில் பாலே அல்ல என்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணம்!

ஆம், டிட்டர்ஜண்ட் பவுடர், பாமாயில் மற்றும் தரம் குறைந்த ரசாயன பவுடர் ஒன்றை பயன்படுத்தி பால் போன்ற ஒன்றை செயற்கையாக உருவாக்கியுள்ளது ஒரு நிறுவனம்.

2.3 கோடி லிற்றர் ரசாயன பால் விநியோகம்... கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல் | 2 3 Crore Litre Synthetic Milk Made In Maharashtra

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் பாலில், 100 லிற்றர் நல்ல பாலுடன் 10 லிற்றர் இந்த கலப்பட பால் கலக்கப்பட்டுள்ளது.அப்படியானால், 2.3 கோடி லிற்றர் கலப்படப் பால், கடந்த ஆறு மாதங்களாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுவந்திருக்கிறது.

அவ்வகையில், 2,30,470 கிலோ செயற்கை பால் பவுடரை பயன்படுத்தி, சுமார் 23,04,070 லிற்றர் கலப்படப் பால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 9.21 கோடி ரூபாய் ஆகும்.

மஹாராஷ்ட்ராவின் Dharashiv மாவட்டத்தில் இந்த கலப்பட கும்பலை பொலிசாரும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் கண்டுபிடித்துள்ள நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு பேரும் தலைமறைவாகிவிட்டார்கள்.

அவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை ஆய்வாளர் ஒருவர் தலைமையில் சிறப்பு பொலிஸ் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதிரவைக்கும் தகவல் விடயம்

என்னவென்றால், இந்த டிட்டர்ஜெண்ட் மற்றும் பாமாயில் கலந்த கலப்பட பாலை அருந்துவதால், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் குடல் பயங்கரமாக பாதிக்கப்படும்.

2.3 கோடி லிற்றர் ரசாயன பால் விநியோகம்... கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல் | 2 3 Crore Litre Synthetic Milk Made In Maharashtra

குறிப்பாக, குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்களுக்கு இந்த கலப்படப் பால் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், மஹாராஷ்ட்ராவின் Dharashiv மாவட்டத்திலுள்ள Bhum தாலுகாவிலிருந்து நாளொன்றிற்கு பல லட்சம் லிற்றர் பால் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அத்துடன், நாளொன்றிற்கு சுமார் 70 முதல் 80 டன் கோவாவும் தயாரிக்கப்படுகிறது. ஆக, இதே கலப்படப் பாலை பயன்படுத்தி அந்த கோவா தயாரிக்கப்பட்டுள்ளதா, அந்த கலப்படப் பால் ஏற்றுமதி செய்யப்படுவதால், அது எங்கெங்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என்னும் பல கேள்விகள், நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *