இஙகிலாந்தின் கிளோசஸ்டர்ஷெயாரை சேர்ந்த கழகம் ஒன்று டி20 கிரிக்கெட்டில் 2 விக்கெட் இழப்பு 417 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அது உலக சாதனையா என்பதை உறுதி செய்வதற்காக காத்துள்ளது.
பிரீமியர் ஒன்று முன்னிலை பிரிவில் ஆடும் டம்ப்லெடன் அணி கடந்த செவ்வாய்க்கிழமை (07) நடந்த டி20 போட்டியில் ஹெதர்லி மற்றும் ரெட்டிங் அணிக்கு எதிராக இந்த இமாலய ஓட்டத்தை பெற்றுள்ளது. ஆரம்ப வீரர் இவான் கெக் 55 பந்துகளில் 13 பௌண்டரிகள் மற்றும் 23 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 206 ஓட்டங்களை விளாசி இருப்பதோடு டான் கொலன்ட் 37 பந்துகளில் 122 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
பதிலெடுத்தாடிய ஹெதர்லி மற்றும் ரெட்டிங் அணி 229 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.இந்நிலையில் இந்த ஓட்டங்கள் டி20 கிரிக்கெட் சாதனையில் உள்ளடக்கப்படுவது குறித்து டம்ப்லெடன் அணி விண்ணப்பித்துள்ளது. 2017 இல் இந்தியாவின் உள்ளூர் டி20 போட்டியில் மாவி அணி 2 விக்கெட் இழப்புக்கு 416 ஓட்டங்களைப் பெற்றதே சாதனையாக உள்ளது.




