இலங்கைக்கு எதிரான டெஸ்டில் மேற்கிந்திய அணிக்கு அபராதம்

1 Min Read

அன்டிகுவாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மந்தமாக பந்துவீசிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு போட்டிக் கட்டணத்தில் பத்து வீத அபராதம் விதிக்கப்பட்டிருப்பதோடு இரண்டு உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளன.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியது கண்டறியப்பட்டதை அடுத்து போட்டி மத்தியஸ்தர் ஜவகல் ஸ்ரீநாத் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளார்.

ஐ.சி.சி. வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான நடத்தை விதிமுறைகளின்படி, ஒரு அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் வீசத் தவறும் ஒவ்வொரு ஓவருக்கும், அந்த அணியின் ஒவ்வொரு வீரரின் போட்டிக் கட்டணத்தில் 5 வீதம் அபராதமாக விதிக்கப்படும். இருப்பினும், இந்த அபராதம் போட்டிக் கட்டணத்தின் அதிகபட்சம் 50 சதவீதம் வரை மட்டுமே விதிக்கப்படும். மேலும், ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி விதிமுறைகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களைவிட ஒவ்வொரு ஓவர் குறைவாக வீசப்பட்டதற்கும், அந்த அணிக்கு ஒரு புள்ளி கழிக்கப்படும்.இந்த டெஸ்ட் போட்டியை சமன் செய்த மேற்கிந்திய தீவுகள் தொடரை 1–0 என கைப்பற்றிமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *