உலகளாவிய புவிசார் அரசியலில் திருப்புமுனை

1 Min Read

உலகளாவிய புவிசார் அரசியலில் நாம் ஒரு திருப்புமுனையில் இருக்கிறோம் என்று நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தெரிவித்துள்ளார்.

தென் பசிபிக் பெருங்கடலில் அணுவாயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணையை சீனா சோதனை செய்த பின்னர் நியூசிலாந்து பிரதமரின் இக்கருத்துக்கள் வந்துள்ளன.

அதேநேரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் விஜயம் மேற்கொண்டு இன்று நியூசிலாந்து செல்கிறார்.

இவ்வாறான சூழலில் ஊடகமொன்றுக்கு அளித்துள்ள விஷேட பேட்டியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள நியூசிலாந்து பிரதமர், ஒத்த நலன்களையும் விழுமியங்களையும் பகிர்ந்து கொள்ளும் நாடுகளுடன் வலுவான உறவு வலைப்பின்னல்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பேட்டியில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மேற்கு அரைக்கோளத்தின் மீது ஒரு பிடிவாதத்துடன், அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்று பேசும் ஒரு அமெரிக்காவை நாங்கள் காண்கிறோம். சீனா நமது இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்த விரும்புவதை நாம் காண்கிறோம். மேலும், உக்ரைன் என்ற இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து, ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்த விரும்புவதையும் நாம் காண்கிறோம் என்றும் கூறியுள்ளார்.இந்தியன் எக்ஸ்பிரஸ்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *