மேற்கிந்திய அணி ஸ்திர ஆட்டம்

1 Min Read

இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸில் ஸ்திர ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அன்டிகுவாவில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸுக்காக 549 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையை எட்டியது. எனினும் ஆட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று முன்தினம் (05) தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அன்றைய நாள் ஆட்டநேர முடிவில் 111 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

குறிப்பாக 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப் மற்றும் ஜஸ்டின் கிரீவ் பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 174 ஓட்டங்களை பெற்றிருந்தனர். இதன்போது ஹோப் 173 பந்துகளில் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களையும் கரீவ் 162 பந்துகளில் ஆட்டமிழக்காது 85 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். முன்னதாக ஆரம்ப வீரர் ஜோன் கெம்பல் 154 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பெற்றார்.

பிரபாத் ஜயசூரிய ஒன்பது ஓட்ட இடைவெளியில் மேற்கிந்திய தீவுகளின் இரு விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் அவரால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியாமல் போனது. மற்ற இரு விக்கெட்டுகளையும் அசித்த பெர்னாண்டோ பதம்பார்த்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *