தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு பாராளுமன்ற பணியாளர்களும் பாராளுமன்ற பணியாளர் பெளத்தச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த “தியவன்னா பௌத்த பக்தி கீதம்” நிகழ்வு குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி கலந்துகொண்டு ஐஸ்கிறீம் வழங்குவதை படத்தில் காணலாம்.
பாராளுமன்றத்தின் அனைத்து திணைக்களங்கள் மற்றும் இணைந்த சேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பணியாளர்களின் பங்களிப்புடன் இந்த பௌத்த பக்தி கீதம் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




