இலங்கை தேசிய வைத்தியசாலையில் ரூ. 602 மில்லியன் முதலீட்டில் புதிதாக நிறுவப்பட்ட 2 இருதய கதீட்டர் ஆய்வகங்கள் (Cardiac Catheterization Laboratory Complex) மற்றும் நவீனமயமாக்கப்பட்ட இருதய நோய் சிகிச்சை பிரிவு ஆகியன உத்தியோகபூர்வமாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் புதிய கதீட்டர் ஆய்வகங்கள் (Cath Labs) மற்றும் புதிதாக புனரமைக்கப்பட்ட 71 B வார்டு ஆகியன பார்வையிடப்பட்டதுடன், நாட்டின் இருதய சிகிச்சை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பல முக்கிய எதிர்காலத் திட்டங்களும் இதன்போது அறிவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் குமார விக்ரமசிங்க, இலங்கை தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.கே. சம்பத் இந்திக குமார, பிரதிப் பணிப்பாளர் டொக்டர் பிரதீப் ரத்னசேகர, ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுகாதார அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் அனில் திஸாநாயக்க மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.




