கனடா துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி, குடிமகன் பலி

1 Min Read

கனடாவின் மொன்ட்ரியல் நகரில் நேற்று முன்தினம் மதியம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவர், ஒரு பொதுமகன் மற்றும் ஆயுதம் ஏந்திய தாக்குதல்தாரி ஆகியோர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தனியாகச் செயல்பட்டதாக நம்பப்படும் அடையாளம் தெரியாத ஆண் சந்தேக நபரின் துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரியும் பொதுமகனும் கொல்லப்பட்ட அதே சமயம், அந்நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று மொன்டேரியல் நகரின் பொலிஸ் தலைவர் கூறினார். இச்சம்பவத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார், ஆனால் அவரது நிலைமை சீராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மொன்டேரியல் நகரின் பன்முகத்தன்மை வாய்ந்த கோட்-டெஸ்-நெய்ஜஸ் பகுதியில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

சுமார் கால் நூற்றாண்டுக்குப் பிறகு, கடமையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டிருக்கும் முதல் சம்பவம் மொன்டேரியல் நகரில் பதிவாகியுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பி.பி.சி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *