எதிரணி வீரருடன் பேசும்போது வாயை மறைத்ததற்காக பிஃபா உலகக் கிண்ணத்தில் முதல் வீரராக பரகுவாயின் மிகுவேல் அல்மிரோன் சிவப்பு அட்டை பெற்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற துருக்கிக்கு எதிரான குழுநிலை போட்டியின்போதே அவர் மைதான்தை விட்டு வெளியேற்றப்பட்டார். துருக்கி வீரர் மேர்ட் முல்டுருடன் பேசும்போது 32 வயது அல்மிரோன் தனது கைகளால் வாயை மறைத்துக் கொண்டார். அது பற்றி எதிரணி வீரர் அருகில் இருந்த மத்தியஸ்தரிடம் உடனடியாக தெரிவித்தார். வீடியோ உதவி நடுவர் மூலம் அது சரிபார்க்கப்பட்ட பின்னர் அவருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. அல்மிரோன் இன்றி அந்தப் போட்டியில் 1–0 என வெற்றியீட்டிய பரகுவாய் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. கால்பந்து போட்டிகளில் வீரர்கள் வாயை மறைத்தபடி எதிரணி வீரர்களை இனவெறி அல்லது கடுமையான வார்த்தைகளால் திட்டுவதைத் தடுப்பதற்காக, நடப்பு உலகக் கிண்ணத்தில் பிஃபா இந்த விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாயை மறைத்த பரகுவாய் வீரருக்கு ‘சிவப்பு’ அட்டை

By

Leave a Comment


Subscribe to our newsletter to get our newest articles instantly!
Most Read
- Advertisement -
