திறந்த பால்கனியில் கழிப்பறை: பெங்களூருவில் வீடு தேடிய பெண்களுக்கு அதிர்ச்சி

1 Min Read

பெங்களூருவில் திறந்த பால்கனியில் கழிப்பறை கட்டப்பட்டது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

  பால்கனியில் ஒரு கழிப்பறை

பெங்களூருவில் வாடகைக்கு நல்ல வீடு கிடைப்பது என்பது தற்போது மிகப்பெரிய சவாலாக உள்ளது.  அப்படிப்பட்ட சூழ்நிலையில் இரண்டு இளம்பெண்கள் பெங்களூருவில் வாடகைக்கு வீடு ஒன்றை பார்க்க சென்ற போது பால்கனியின் நடுவே கழிப்பறை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

த்ரிஷா என்ற பயனர் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், வீடு சுற்றுலா போன்று தொடங்கிய காட்சிகள் திடீரென பெரும் திருப்பமாக அமைந்தது.

திறந்த பால்கனியில் கழிப்பறை: பெங்களூருவில் வீடு தேடிய பெண்களுக்கு அதிர்ச்சி | Toilet In Balcony Bangaluru Apartment Viral Video

வழக்கமாக பால்கனி என்றால் அழகிய செடி கொடிகள் அல்லது பொறுமையாக அமர்ந்து ரசிக்கும் இடமாக அல்லது துணிகளை காய வைக்கும் பகுதியாக கூட சிலர் பயன்படுத்தி பார்த்து இருப்போம்.

ஆனால் இந்த வீடியோவில் பால்கனியின் நடுவே எந்தவொரு மறைப்பும் இல்லாமல் கழிப்பறை ஒன்று கட்டப்பட்டு இருந்தது அந்த பெண்களுக்கு வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண்கள் வெளிப்படுத்திய அதே மனநிலையையே இணையவாசிகள்  பலரும் பிரதிபலித்தனர்.

இணையவாசிகள் கிண்டல்

பெங்களூருவில் வீடு தேடும் அனுபவம் இப்படி தான் இருக்கிறது என்று குறிப்பிட்டு த்ரிஷா என்பவர் வெளியிட்ட வீடியோவின் கீழ் நெட்டிசன்கள் தங்களின் வேடிக்கையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ஒருவர், “இது பால்கனி அல்ல. இது திறந்தவெளி பார்வை வசதி கொண்ட கழிப்பறை என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *