திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு வயது வரம்பு – 13 பேருக்கு பறிபோகும் பதவி?

2 Min Read

திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு 70 வயது அதிகபட்ச வரம்பாக நிர்ணயித்து திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக செயற்குழு கூட்டம்

2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு திமுகவின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் அமைப்பு ரீதியாக மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது.

திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு வயது வரம்பு - 13 பேருக்கு பறிபோகும் பதவி? | 13 Dmk District Secretaries To Loss Post Age Limit

இதில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு அதிகபட்ச வயது மற்றும் ஒருவர் அதிகபட்சம் எத்தனை முறை அந்த பதவி வகிக்கலாம் என மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் என்ற அடிப்படையில், மாவட்டச் செயலர்கள் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இனி திமுகவில் ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளராக பணியாற்ற முடியும்.

திமுக ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்களின் அதிகபட்ச வயது இனி 60 ஆகவும், மாநகர, பேரூர் வட்டச் செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 50 ஆகவும், கிளைச் செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 45 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 2 முறை மட்டுமே இந்த பதவி வகிக்க முடியும்.

இதன்படி தற்போதுள்ள மாவட்ட செயலர்களில் 13 பேருக்கு 70 வயதை தாண்டி விட்டது. இதனால் இவர்களின் பதவி பறிக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் தெற்கு: சுந்தர் – 72

ராணிப்பேட்டை: ஆர்.காந்தி – 80

திருவண்ணாமலை தெற்கு: எ.வ.வேலு – 75

விழுப்புரம் வடக்கு: செஞ்சி மஸ்தான் – 71

சேலம் கிழக்கு: எஸ் ஆர் சிவலிங்கம் – 75

ஈரோடு தெற்கு: முத்துசாமி – 77

தஞ்சாவூர் வடக்கு: சாக்கோட்டை அன்பழகன் – 72

புதுக்கோட்டை தெற்கு: ரகுபதி – 76

மதுரை மாநகர்: கோ தளபதி – 70

தேனி தெற்கு: ராமகிருஷ்ணன் – 77

விருதுநகர்: கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் – 77

தூத்துக்குடி தெற்கு: அனிதா ராதாகிருஷ்ணன் – 74

திருநெல்வேலி மேற்கு: ஆவுடையப்பன் – 81

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *