மனைவிக்கு பாண் தரவில்லை., சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது இந்திய பயணி குற்றச்சாட்டு

1 Min Read

சிங்கப்பூரிலிருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட SQ406 விமானத்தில் பயணித்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற நபர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழங்கிய உணவு சேவையில் பெரிய குறைபாடு ஏற்பட்டதாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது குற்றச்சாட்டின்படி, விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதோடு, பயணிகள் குளிர்சாதனமின்றி சிரமப்பட்டதாக கூறினார்.

மேலும், உணவு வழங்கும் போது, வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் சைவம் மற்றும் கோழி உணவுகள் முடிந்து, ஆட்டிறைச்சி மற்றும் மீன் மட்டுமே மீதமிருந்ததாகவும், பெரும்பாலான இந்திய பயணிகள் சைவம் விரும்புவோர் என்பதால், இது அவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

Singapore-Airlines-Bread-Row-Sparks-Outrage

கார்த்திக் தனது மனைவிக்கு கூடுதலாக ஒரு பாண் (bread) கேட்டபோது, விமான ஊழியர்கள் மறுத்ததாகவும், “ஏற்கனவே ஒரு பாண் வழங்கப்பட்டதால் கூடுதல் பாண் தர முடியாது” என கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இறுதியில், அருகில் இருந்த மற்றொரு பயணி தனது உணவில் இருந்த பாணை வழங்கியதால், அவரது மனைவி பசியாறியதாக கூறினார்.இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டதால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விளக்கம் அளித்தது. “சிறப்பு உணவுகள் குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன் முன்பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், உணவு விருப்பங்களில் சிக்கல்கள் ஏற்படலாம்” என்று நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் கார்த்திக், இந்த பதிலை ஏற்க மறுத்து, “சைவ உணவை ‘சிறப்பு உணவு’ எனக் கருதுவது தவறு. இந்திய பயணிகளுக்கான திட்டமிடல் குறைவாக இருந்தது” என விமர்சித்துள்ளார்.

இந்த சம்பவம், சர்வதேச விமானங்களில் உணவு திட்டமிடல் மற்றும் பயணிகள் சேவைகள் குறித்து புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *