சொந்த குடும்பத்தையே கொன்ற 19 வயது இந்திய வம்சாவளி இளைஞர்

1 Min Read

அமெரிக்காவில் சொந்த குடும்பத்தையே கொன்ற குற்றச்சாட்டில் 19 வயது இந்திய வம்சாவளி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சொந்த குடும்பத்தையே கொன்ற இந்திய வம்சாவளி மாணவர்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 19 வயது கெளரவ் சோப்ரா என்ற டெக்சாஸ் ரியோ கிராண்டே வேலி பல்கலைக்கழக மாணவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கெளரவ் நடத்திய இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில், தந்தை ஸ்வீரா ராம்(59), தாய் கம்லேஷ் ராணி(46), மற்றும் பாட்டி மிந்தர் கெளர்(73) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சொந்த குடும்பத்தையே கொன்ற 19 வயது இந்திய வம்சாவளி இளைஞர்: காரில் துரத்தி கைது செய்த பொலிஸார் | Indian Origin Teen Kill His Own Family In Texas

பலத்த துப்பாக்கிச் சூடு காயங்களுடன் உயிர் பிழைத்த அவரது சகோதரர் 911 க்கு வழங்கிய தகவலின் படி,  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மீட்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினர்.

பரபரப்பான கார் துரத்தல்

துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திவிட்டு காரில் தப்பிச் சென்ற கெளரவ் சோப்ராவை பொலிஸார் விடாமல் துரத்தினர்.

இறுதியில் கெளரவ் சோப்ராவின் கார் மற்றொரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து உடனடியாக அவரை கெளரவ் சோப்ராவை மடக்கி பிடித்து பொலிஸார் கைது செய்தனர். அத்துடன் அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.  இந்த துப்பாக்கியே கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது.

விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் இருந்த இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை கெளரவ் சோப்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் மீது பலரை கொன்ற “கேபிடல் மர்டர்” கொலை முயற்சி வழக்கு மற்றும் பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.அத்துடன் கெளரவ் சோப்ராவிற்கான பிணை வழங்கவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *