பூட்டானுக்கு எதிராக இலங்கை கோல் மழையுடன் இலகு வெற்றி

3 Min Read

பூட்டான் அணிக்கு எதிரான பிஃபா சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் இலங்கை அணி 4–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. இந்த வெற்றி உடன் இலங்கை அணிக்கு சர்வதேச கால்பந்து சம்மேளன தரவரசையில் மேலும் முன்னேற்றம் காண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நேற்று (08) நடைபெற்ற இந்த நட்புறவுப் போட்டியில் இலங்கை அணி முதல் பாதியிலேயே 1 – 0 என முன்னிலை பெற்றது. போட்டியின் 16 ஆவது நிமிடத்தில் வைத்து வடே டெக்கர் எதிரணியின் தடுப்பு முகாமை முறியடித்து கோல் புகுத்தினார்.

தொடர்ந்து இபூட்டான் அணிக்கு எதிரான பிஃபா சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் இலங்கை அணி 4–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. இந்த வெற்றி உடன் இலங்கை அணிக்கு சர்வதேச கால்பந்து சம்மேளன தரவரசையில் மேலும் முன்னேற்றம் காண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நேற்று (08) நடைபெற்ற இந்த நட்புறவுப் போட்டியில் இலங்கை அணி முதல் பாதியிலேயே 1 – 0 என முன்னிலை பெற்றது. போட்டியின் 16 ஆவது நிமிடத்தில் வைத்து வடே டெக்கர் எதிரணியின் தடுப்பு முகாமை முறியடித்து கோல் புகுத்தினார்.

தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் இலங்கை அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. குறிப்பாக 63 ஆவது நிமிடத்தில் வைத்து ராகுல் சுரேஷ் தனித்து பந்தை எதிரணி கோல் கம்பம் வரை எடுத்துச் சென்றபோதும் அதனை கோலாக மாற்றத் தவிறனார். எனினும் சில நிமிடங்களுக்குள்ளேயே அவரது சகோதரர் பரத் சுரேஷ் தலையால் முட்டி இலங்கைக்கு இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் போட்டியின் 78 ஆவது நிமிடத்தில் வசீம் ராசிக் பெற்ற கோலின் மூலம் இலங்கை அணியால் 3–0 என முன்னிலை பெற முடிந்தது. பூட்டான் அணி கடைசி நேரத்தில் கோல் ஒன்றை புகுத்தினாலும் அது ஆறுதல் கோலாகவே இருந்தது. ஆனால், இத்தோடு நிற்காத இலங்கை அணி மேலதிக நேரத்தில் ராகுல் சுரேஷ் மூலம் மற்றொரு கோலை பெற்றது.

பிஃபா தரவரிசையில் தற்போது 191 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி இந்த வெற்றியுடன் நான்கு இடங்கள் வரை முன்னேற வாய்ப்பு எற்பட்டுள்ளது. எதிர்வரும் சாஃப் சம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும் வகையிலேயே இந்த நட்புறவு போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. ரண்டாவது பாதியிலும் இலங்கை அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. குறிப்பாக 63 ஆவது நிமிடத்தில் வைத்து ராகுல் சுரேஷ் தனித்து பந்தை எதிரணி கோல் கம்பம் வரை எடுத்துச் சென்றபோதும் அதனை கோலாக மாற்றத் தவிறனார். எனினும் சில நிமிடங்களுக்குள்ளேயே அவரது சகோதரர் பரத் சுரேஷ் தலையால் முட்டி இலங்கைக்கு இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் போட்டியின் 78 ஆவது நிமிடத்தில் வசீம் ராசிக் பெற்ற கோலின் மூலம் இலங்கை அணியால் 3–0 என முன்னிலை பெற முடிந்தது. பூட்டான் அணி கடைசி நேரத்தில் கோல் ஒன்றை புகுத்தினாலும் அது ஆறுதல் கோலாகவே இருந்தது. ஆனால், இத்தோடு நிற்காத இலங்கை அணி மேலதிக நேரத்தில் ராகுல் சுரேஷ் மூலம் மற்றொரு கோலை பெற்றது.

பிஃபா தரவரிசையில் தற்போது 191 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி இந்த வெற்றியுடன் நான்கு இடங்கள் வரை முன்னேற வாய்ப்பு எற்பட்டுள்ளது. எதிர்வரும் சாஃப் சம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும் வகையிலேயே இந்த நட்புறவு போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *