நவீனப்படுத்தப்பட்ட KFIR C12 விமானத்தின் முதலாவது சோதனை பறப்பு வெற்றிகரமாக நிறைவு

2 Min Read

மேம்படுத்தப்பட்ட முதல் KFIR C12 போர் விமானம், இலங்கை விமானப்படையின் கட்டுநாயக்க தளத்தில் தனது வான் சோதனைப் பரீட்சையை இன்று (11) வெற்றிகரமாக நிறைவு செய்தது.

இது இலங்கை விமானப்படையின் Kfir போர் விமான நவீனமயமாக்கல் திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

“சிங்கக்குட்டி” என்று செல்லப்பெயர் கொண்ட இல. 10 போர் விமானப் படைப்பிரிவின் Kfir போர் விமான நவீனமயமாக்கல் திட்டம், இஸ்ரேல் Aerospace Industries (IAI) மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், இலங்கை விமானப்படையின் நான்கு Kfir C2 மற்றும் Kfir C7 போர் விமானங்களும், ஒரு Kfir TC2 பயிற்சி விமானமும் சமீபத்திய Kfir சி12 தொழில்நுட்பத் தரத்திற்கு மேம்படுத்தப்படுகின்றன.

மேம்படுத்தப்பட்ட Kfir சி12 விமானம், நவீன டிஜிட்டல் கிளாஸ் காக்பிட் ஏவியானிக்ஸ் அமைப்பைக் கொண்டுள்ளது. இது விமானியின் பங்கை கணிசமாக எளிதாக்கி, செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும். மேலும், மேம்படுத்தப்பட்ட சென்சார் மற்றும் பல்முனை ரேடார் திறன்கள், இலக்கை அடையாளம் காண்பதையும் சூழ்நிலை விழிப்புணர்வையும் மேம்படுத்தியுள்ளன.

அதுமட்டுமின்றி, நவீன வழிசெலுத்தல், தகவல் தொடர்பு மற்றும் வலையமைப்பு சார்ந்த இணைப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு, செயல்பாட்டு ஒருங்கிணைப்பையும் துல்லியத்தையும் வலுப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், துல்லியமான ஆயுத ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பட்ட ஆயுத மேலாண்மை அமைப்புகள், வானிலிருந்து வான் மற்றும் வானிலிருந்து தரைக்கான செயல்பாட்டுத் திறன்களைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளன. இந்த நவீனமயமாக்கல், Kfir சி12 விமானத்தை ஒரு பல்நோக்கு போர் விமானமாக மாற்றமடைந்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட Kfir போர் விமானம், பல்வேறு உயரங்களில் மேலும் சுமார் ஐந்து வான் சோதனைப் பரீச்சனையை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில், கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மேம்படுத்தப்பட்ட இந்தப் போர் விமானத்தின் பறக்கும் செயல்திறனைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். இலங்கை விமானப்படையின் நவீன தொழில்நுட்பத் திறன்களைப் பொதுமக்களுக்கு நேரடியாக கண்டுகளிப்பதற்கான ஒரு சிறப்பு வாய்ப்பாகவும் இது கருதப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மற்றும் இலங்கை விமானப்படைத் தளபதி, எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் முதல் வான் பரீட்சை நடத்தப்பட்டது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *