NVIDIA சிப் கொண்ட முதல் Windows PC அறிமுகம்

1 Min Read

NVIDIA சிப் மூலம் இயங்கும் முதல் Windows PC அடுத்த வாரம் உலகிற்கு அறிமுகமாக உள்ளது.

Axios வெளியிட்ட தகவலின்படி, Microsoft மற்றும் NVIDIA இணைந்து இந்த புதிய கணினிகளை அறிமுகப்படுத்த உள்ளன.

Microsoft Surface பிராண்டுடன் சேர்த்து Dell போன்ற பிற நிறுவனங்களும் NVIDIA சிப் கொண்ட Windows கணினிகளை வெளியிட உள்ளன.

இதுவரை Windows லேப்டாப்களுக்கு Intel, AMD, Qualcomm போன்ற நிறுவனங்கள் CPU-களை வழங்கி வந்தன. இப்போது NVIDIA தனது சிப் மூலம் Windows இயங்குதளத்தை இயக்கும் புதிய முயற்சியை மேற்கொள்கிறது.

Nvidia-Powered Windows PC Launch Next Week, Microsoft

இந்த கணினிகள் தைவானில் நடைபெறும் Computex கண்காட்சி மற்றும் San பிரான்சிஸ்கோவில் நடைபெறும் Microsoft Build Developer Conference-இல் அறிமுகமாகும்.

NVIDIA, Arm தொழில்நுட்பத்தை பயன்படுத்தி CPU-களை வடிவமைக்கிறது.

Apple தனது சொந்த M5 சிப் கொண்ட MacBook-களை மார்ச் மாதத்தில் வெளியிட்டது. அதேபோல் Microsoft, NVIDIA இணைந்து AI-க்கு உகந்த, அதிக பேட்டரி ஆயுட்காலம் கொண்ட Windows PC-களை உருவாக்க முயற்சிக்கிறது.

இந்த புதிய PC-கள், AI ஏஜென்ட்கள் நேரடியாக Windows கணினிகளில் செயல்பட உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி உலகில் புதிய யுகம் தொடங்குகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *