நகரளாவிய சுற்றுலாத் தலங்கள், அனுபவங்கள், நிகழ்வுகள் மற்றும் சமூகங்களை ஒரே தொழில்நுட்பத் தளத்தின் ஊடாக இணைக்கும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய டிஜிட்டல் சூழலமைப்பான PickMe Explore தளத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் முதலாவது நகரளாவிய சுற்றுலா மையமாக Colombo Connectஐ PickMe நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது.
கொழும்பு தாமரைக் கோபுரத்தில் இடம்பெற்ற இவ் அறிமுக நிகழ்வில் மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இதில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, கொழும்பு தாமரைக் கோபுரத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ், பயண எழுத்தாளர், புகைப்பட ஊடகவியலாளர் மற்றும் நூலாசிரியருமான ஜூலியட் கூம்பே ஆகியோருடன் பல முக்கிய விருந்தினர்களும் PickMe மற்றும் கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவக் குழுக்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
கொழும்பு தாமரைக் கோபுரம் உடனான கூட்டாண்மையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Colombo Connect சூழலமைப்பில் இணையும் முதலாவது சுற்றுலாத் தலமாக தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது. தலைநகரில் வசிப்பவர்கள் மற்றும் வருகை தருபவர்கள் கொழும்பை அனுபவிக்கும் விதத்தை மாற்றியமைப்பதே இம்முயற்சியின் நோக்கமாகும். சுற்றுலாத் தலங்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு, வணிகங்கள், கலாசாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை டிஜிட்டல் ரீதியில் ஒருங்கிணைத்து, தடையற்ற ஒரே பயண அனுபவமாக இது வழங்குகின்றது. இச் சூழலமைப்பு முழுமையாக வளர்ச்சியடைந்த நிலையில், வருடாந்தம் ரூ.30 பில்லியனுக்கும் அதிகமான பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக நிறுவனம் மதிப்பிடுகின்றது.
இது கொழும்பை மேலும் கண்டறியவும், நகரில் அதிக நேரத்தை செலவிடவும் வருகையாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் சாத்தியமாகும். அறிமுக நிகழ்வில் கருத்துத் தெரிவித்த PickMeஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜிப்ரி ஸுல்பர், “தெற்காசியாவின் மிகவும் பரபரப்பான நகர்ப்புற மையங்களில் ஒன்றாக மாறுவதற்குத் தேவையான அனைத்தையும் கொழும்பு ஏற்கனவே கொண்டுள்ளது.




