சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 90ஐ தாண்டிய பலி எண்ணிக்கை

1 Min Read

சீனாவின் சாங்ஜி(Changzhi) நகரில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள எரிவாயு கசிவில் 90 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

நிலக்கரி சுரங்க விபத்து

சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள லியுஷென்யு(Liushenyu) நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள விபத்தில் குறைந்தது 90 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 90ஐ தாண்டிய பலி எண்ணிக்கை | China Coal Mine Accident 90 Dead

Xinhua செய்தி நிறுவனத்தின் தகவல் படி, வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்தானது நடந்துள்ளது. இந்த விபத்தின் போது கிட்டத்தட்ட 247 தொழிலாளர்கள் சுரங்கத்தில் பணிபுரிந்து வந்ததாக தகவல் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் நச்சுத்தன்மை கலந்த வாயுவை சுவாசித்ததால் உடல்நல பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு அளவை தாண்டி கார்பன் மோனாக்சைடு வாயு கசிந்ததே சுரங்கத்திற்குள் வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 90ஐ தாண்டிய பலி எண்ணிக்கை | China Coal Mine Accident 90 Dead

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியை தீவிரப்படுத்துமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விபத்துக்கான காரணத்தை முழுமையாக ஆராய்ந்து தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி தீவிரமான நடவடிக்கை எடுக்கவும் ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆணையிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *