இந்திய இளையோர் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்

1 Min Read

மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகளில் ஆடுவதற்காக இந்திய 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மற்றும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன. இதன் முதல் போட்டி ஜூலை 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அடுத்த இரு போட்டிகளும் ஜூலை 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் இடம்பெறும்.

தொடர்ந்து இரு அணிகளும் மோதும் முதலாவது நான்கு நாள் போட்டி ஜூலை 13 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது நான்கு நாள் போட்டி கொழும்பில் ஜூலை 20 தொடக்கம் 23 ஆம் திகதி வரை நடைபெறும்.

முன்னதாக இந்திய, ஆப்கான் மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான முக்கோண ஒருநாள் தொடர் ஒன்று எதிர்வரும் ஜூன் ஆரம்பத்தில் இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *