காசா முழுவதும் உள்ள நெரிசலான முகாம்களில் தோல் நோய்கள் பரவி வருவதால், புதிய பொது சுகாதார நெருக்கடி உருவாகி வருவதாகவும், கோடைக்காலத்தில் நிலைமை மோசமடையக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
சமீபத்திய மாதங்களில் தோல் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளதாக பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலை, நெரிசல் மற்றும் மோசமடைந்து வரும் சுகாதார நிலை ஆகியவை, குறிப்பாக குழந்தைகளிடையே சிரங்கு, சின்னம்மை மற்றும் பிற நோய்கள் பரவுவதற்கு உகந்த சூழலை உருவாக்குகின்றன.
2024 இல் நிகழ்ந்ததைப் போன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க குடும்பங்களும் சுகாதார அதிகாரிகளும் தீவிரமாக முயல்கின்றனர். அக்காலப்பகுதியில் காசாவில் குறைந்தது 150,000 மக்களை தோல் நோய்களுக்கு உள்ளாகினர்.
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ள ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபான் டுஜாரிக், காசாவில் உள்ள மக்களிடையே பூச்சித் தொல்லைகளும் தோல் நோய்த்தொற்றுகளும் இன்னும் அதிகரித்து வருவதாக களத்தில் உள்ள குழுக்கள் கூறுகின்றன என்றும் கூறியுள்ளார்.



