சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 26 பேர் உயிரிழந்ததாகவும், 61 பேர் காயமடைந்ததாகவும் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தெற்கு நகரமான லியுயாங்கில் உள்ள ஹுவாஷெங் பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் பிற்பகல் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து, ஆலையைச் சுற்றியுள்ள 03 கிலோ மீற்றர் சுற்றளவில் இருந்த அனைவரையும் அதிகாரிகள் வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதிகாரிகள் 1,500 இற்கும் மேற்பட்ட அவசரகால மீட்புப் பணியாளர்களுடன், நாய்கள், ட்ரோன்கள் மற்றும் ரோபோக்களையும் பணியில் ஈடுபடுத்தினர். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த ஏழு பேரை அவர்கள் மீட்டனர்.
வெடிவிபத்திற்கான காரணத்தை விசாரித்து வரும் பொலிஸார், பட்டாசு நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் மீது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக த் தெரிவித்துள்ளனர்.



