ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் விழுந்த குழந்தை: உடனடியாக தந்தை செய்த செயல்

1 Min Read

பங்களாதேஷ் நாட்டில், ஒருவர் ரயிலிலிருந்து இறங்கும்போது அவரது குழந்தை ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் விழுந்த சம்பவத்தைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.

தந்தை செய்த செயல்

பங்களாதேஷ் நாட்டில், ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் தனது ரயில் நிலையத்தில் இறங்க தாமதம் செய்யவே, அவர் இறங்குவதற்குள் ரயில் புறப்பட்டுள்ளது.

ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் விழுந்த குழந்தை: உடனடியாக தந்தை செய்த செயல் | Dad Shields Son Fell On Railway Track

ரயில் ஓடும்போதே அவர் ரயிலிருந்து இறங்க, அவர் கையைப் பிடித்திருந்த ஒரு வயதே ஆகும் அவரது குழந்தை, ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் விழுந்துள்ளான்.

உடனே சற்றும் யோசிக்காமல் பிளாட்பார இடைவெளிக்குள் குதித்த அந்த நபர், தன் மகனை தன் அருகே இழுத்து அணைத்துக்கொண்டு அவனுக்கு அடிபடாமல் பார்த்துக்கொண்டுள்ளார்.

நடந்ததைக் கண்டு அதிர்ந்துபோயிருந்த மக்களில் ஒரு பெண் உட்பட சிலர், ரயில் அங்கிருந்து சென்ற உடனே பிளாட்பாரத்தில் குதித்துள்ளனர்.

அந்தப் பெண் அந்தக் குழந்தையை தூக்கி வாரி அணைத்துக்கொள்ள, மற்றவர்கள் அந்த குழந்தையின் தந்தைக்கு அடிபட்டுள்ளதா என சோதிக்க பின் அவர்கள் இருவரும் மேலே வர உதவியுள்ளார்கள் அவர்கள்.

ஆச்சரியப்படும் விதமாக, அவருக்கோ அந்த குழந்தைக்கோ எந்த காயமும் ஏற்படவில்லை.

இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், மகனைக் காப்பாற்ற சற்றும் யோசிக்காமல் துணிந்து செயல்பட்ட அந்த தந்தையை பலரும் ஹீரோ என பாராட்டிவருகிறார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *