இலகு வெற்றியீட்டிய பெங்களூரு ஆதிக்கம்

1 Min Read

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய நடப்புச் சம்பியன்ஸ் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

பெங்களூரு, எம். சின்னசாமி அரங்கில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட லக்னோ அணி 20 ஓவர்களுக்கும் 146 ஓட்டங்களுக்கே சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய வலது கை வேகப்பந்து வீச்சாளர் ராசிக் சலாம் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு புவனெஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த பெங்களூரு 15.1 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்று வெற்றியை எட்டியது. விராட் கொஹ்லி 34 பந்துகளில் 49 ஓட்டங்களை பெற்று இதுவரை நடந்த போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு அணி இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 4 வெற்றி ஒரு தோல்வியை பெற்று 8 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *