அமெரிக்கா இதை மறக்காது… படைகளை அனுப்ப மறுத்த பிரித்தானியாவிற்கு ட்ரம்ப் பதில்

1 Min Read

ஈரானுக்கு எதிராக படைகளை அனுப்ப மீண்டும் மறுத்ததற்காக, கெய்ர் ஸ்டார்மரை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் விமர்சித்துள்ளார்.

ட்ரம்ப் மிரட்டல்

பிரித்தானியா அமெரிக்காவின் முதன்மையான நேச நாடா என்றும் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், ஈரானுக்கு எதிரான போரில் யார் யார் ஆதரவளிக்கிறார்கள் என்பதை அமெரிக்கா நினைவில் வைத்திருக்கும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்கா இதை மறக்காது... படைகளை அனுப்ப மறுத்த பிரித்தானியாவிற்கு ட்ரம்ப் பதில் | We Will Remember Trump

ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் உதவ போர் கப்பல்களை அனுப்ப டொனால்ட் ட்ரம்ப் சீனா, பிரித்தானியா உட்பட பல நாடுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், அந்த நாடுகள் அனைத்தும் ட்ரம்பை தவித்துவிட, பிரித்தானியா தரப்பில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தொலைபேசியில் ட்ரம்பை தொடர்பு கொண்டு அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

ஆனால், அந்த நாடுகள் அனைத்தும் ட்ரம்பை தவித்துவிட, பிரித்தானியா தரப்பில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தொலைபேசியில் ட்ரம்பை தொடர்பு கொண்டு அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

வெறும் வாய்ச்சவடால்

பிரித்தானியா மட்டுமின்றி, பிரான்ஸ், கனடா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியாவும் ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

நீரிணையில் கப்பல்களை அனுப்புமாறு தான் விடுத்த கோரிக்கைக்குக் கிடைக்கும் பதிலையும், நேட்டோவின் எதிர்காலம் மற்றும் உக்ரைனுக்கான ஆதரவையும் ஒன்றிணைப்பதன் மூலம், ட்ரம்ப் ஒரேயடியாக தனது அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தினார்.

அமெரிக்கா இதை மறக்காது... படைகளை அனுப்ப மறுத்த பிரித்தானியாவிற்கு ட்ரம்ப் பதில் | We Will Remember Trump

ஆனால், ட்ரம்பின் இந்த மிரட்டலை பிரித்தானிய அமைச்சர்கள் வெறும் வாய்ச்சவடால் என புறந்தள்ளியுள்ளனர். ஈரான் மீதான போரின் தொடக்கத்தில் பிரித்தானியா உதவ மறுத்ததை அடுத்து, கெய்ர் ஸ்டார்மர் ஒன்றும் சர்ச்சில் கிடையாது சமயோசிதமாக முடிவெடுக்க எனவும் ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *