பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம்

1 Min Read

பிரித்தானிய விமானப்படை விமான தளத்தில் அமெரிக்காவின் 3 குண்டுவீச்சு விமானங்கள் வந்து இறங்கியுள்ளன.

ஈரானுடன் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையில், அமெரிக்காவின் மூன்று B-52 குண்டுவீச்சு விமானங்கள் பிரித்தானியாவின் Gloucestershire பகுதியில் உள்ள RAF Fairford விமான தளத்தில் தரையிறங்கியுள்ளன.

இதற்கு முன், B-1 Lancer மற்றும் பிற விமானங்களும் அங்கு வந்திருந்தன.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

US bombers UK, RAF Fairford Iran conflict, B-52 bombers Gloucestershire, Keir Starmer Iran crisis, US UK military cooperation, Iran missile strikes, Middle East tensions #IranConflict #USBombers #UKNews #RAFfairford #MiddleEastTensions #KeirStarmer #B52Bomber #GlobalSecurity

ஈரானின் ஏவுகணை தளங்களை அழிக்க அமெரிக்கா, பிரித்தானிய தளங்களை பயன்படுத்தும் என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

ஆனால், “வான்வழி தாக்குதல்கள் மூலம் ஆட்சியை மாற்றும் நோக்கம் எங்களுக்கு இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

B-52 குண்டுவீச்சு விமானங்கள் 160 அடி நீளமுடையவை. 1,500 மைல் தூரம் வரை ஏவுகணைகளை செலுத்தும் திறன் கொண்டவை.

70,000 பவுண்டு வரை ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன்கொண்டதன் காரணமாக, அமெரிக்காவின் முக்கியமான நீண்டதூர குண்டுவீச்சு விமானமாக B-52 விமானம் இன்னும் பயன்படுத்தப்படுகிறது.

ஈரானின் ‘scorched-earth Strategy’ காரணமாக, பிரித்தானிய குடிமக்களின் உயிர் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை அவசியம் என ஸ்டார்மர் கூறியுள்ளார்.

ஈரான் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மீது தாக்குதல்களை நடத்திவருவதால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நடவடிக்கை, பிரித்தானியாவும் அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளும் பாதுகாப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

பிரித்தானியாவின் RAF Fairford விமான தளம், நீண்டதூர குண்டுவீச்சு நடவடிக்கைகளுக்கு முக்கிய தளமாக கருதப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *