இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஈரானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை எவ்வளவு?

1 Min Read

மத்திய கிழக்கில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் உலகம் முழுவதும் பதற்றம் நிலவுகின்ற சூழலில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்தால், அதன் நேரடி தாக்கம் இந்தியாவிலும் இருக்கும்.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஈரானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை எவ்வளவு? | How Much A Liter Of Petrol Costs In Iran

இந்நிலையில் மீண்டும் விலை உயர்ந்தால், குடும்ப செலவுத்திட்டம் பாதிக்கப்படும் என மக்கள் கவலைப்படுகின்றனர்.

அந்தவகையில், ஈரானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2 முதல் 5 ரூபாய் வரை மட்டுமே உள்ளது என்று கூறப்படுகிறது.

உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஈரான், தனது நாட்டிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்டுள்ளது.

அதனால் வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் குறைவு. ஆனால் இந்தியா தனது எண்ணெய் தேவைகளில் சுமார் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.

 

இதனால் கச்சா எண்ணெய் விலை, கப்பல் செலவு மற்றும் டாலர் மாற்று விகிதம் ஆகியவை பெட்ரோல் விலையை தீர்மானிக்கின்றன.

இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஈரானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை எவ்வளவு? | How Much A Liter Of Petrol Costs In Iran

மேலும், ஈரானில் அரசாங்கம் அதிக எரிபொருள் மானியம் வழங்குகிறது. இதனால் குறைந்த விலையில் மக்களுக்கு பெட்ரோல் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் மத்திய அரசின் கலால் வரி மற்றும் மாநில அரசின் வாட் வரி சேர்த்து, பெட்ரோல் விலையில் 40 முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.

போர் நீடித்தால் மற்றும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டால், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளது.

இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.110ஐ தாண்டும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *