ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்க கடற்படை செல்லும்: டிரம்ப் நேரடி சவால்

1 Min Read

மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்க கடற்படை செல்லும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலை தொடர்ந்து ஈரான் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்ததோடு இப்பகுதியை கடக்க முயற்சிக்கும் படகுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்க கடற்படை செல்லும்: டிரம்ப் நேரடி சவால் | Us Navy Pass Through Strait Of Hormuz

இந்த ஹார்மூஸ் ஜலசந்தியானது பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் வளைகுடாவிற்கும் இடையில் செல்லும் முக்கிய கடல் வழி பாதையாகும்.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான முக்கிய கடல் வழி பாதையாக பார்க்கப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கிட்டத்தட்ட முற்றிலுமாக மூடியுள்ளதால், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வழக்கமாக கடந்து செல்வது தடைப்பட்டுள்ளது.

டிரம்ப் எச்சரிக்கை

இந்நிலையில், வளைகுடா வழியாக அரசியல் ஆபத்து காப்பீடு மற்றும் அனைத்து கடல்சார் வர்த்தகத்திற்கான உத்தரவாதங்களை வழங்க கூட்டாட்சி நிறுவனத்திற்கு அறிவுறுத்தி இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்க கடற்படை செல்லும்: டிரம்ப் நேரடி சவால் | Us Navy Pass Through Strait Of Hormuz

அத்துடன் மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தேவைப்பட்டா அமெரிக்க கடற்படை செல்லும் என்றும், அவ்வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், என்ன நடந்தாலும், உலகின் சக்தி வளங்களின் சுதந்திரமான ஓட்டத்தை அமெரிக்கா நிச்சயம் உறுதி செய்யும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *