ஈரானிய ட்ரோன்கள் குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கியதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ட்ரோன்கள்
இஸ்ரேல்-அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேபோல் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இரண்டு ட்ரோன்கள் தாக்கின.
இதில் குறைந்த அளவிலான தீ விபத்து மற்றும் கட்டிடத்திற்கு சிறிய அளவிலான பொருட்சேதம் ஏற்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
பாதுகாப்பு எச்சரிக்கை
குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திலும் இதேபோன்ற ட்ரோன் தாக்குதல் அரங்கேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க தூதரகம் ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.
அதில், “சவுதி அரேபியாவிற்கான அமெரிக்க தூதரகம் ஜெட்டா, ரியாத் மற்றும் தஹ்ரானுக்கான தங்குமிடம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு இராணுவ நிறுவல்களுக்கும் அத்தியாவசியமற்ற பயணத்தை மட்டுப்படுத்துகிறது. இராஜ்ஜியத்தில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக அந்த இடத்தில் தங்கியிருக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.






