காமேனியின் மரணம்… மகிழ்ச்சியா சோகமா? ஈரான் மக்களின் மனநிலை

1 Min Read

பல ஆண்டுகளாக அடக்கியாளப்பட்ட ஈரான் மக்கள், கடந்த ஆண்டு இறுதி முதல் ஆளும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இந்நிலையில், 36 ஆண்டுகளாக ஈரானை ஆண்டுவந்த காமேனி என்னும் அயத்துல்லா அலி காமேனி, அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டார்.

ஆக, இத்தனை ஆண்டுகளாக அடக்குமுறையை எதிர்கொண்டுவந்த ஈரான் மக்களுக்கு காமேனியின் மரணம் ஆறுதலைக் கொண்டுவந்துள்ளதா அல்லது அச்சத்தைக் கொண்டுவந்துள்ளதா என்றால், ஈரான் மக்கள் மனநிலை வெவ்வேறு விதமாக அமைந்துள்ளது தெரியவந்துள்ளது.

காமேனியின் மரணம் சோகமா, மகிழ்ச்சியா?

ஈரானின் பல்வேறு இடங்களில், காமேனியின் மரணத்தைக் கொண்டாட மக்கள் கூடியுள்ளார்கள்.

காமேனியின் மரணம்... மகிழ்ச்சியா சோகமா? ஈரான் மக்களின் மனநிலை | Mixed Emotions In Iranians For Ali Khamenei Death

காமேனி கொல்லப்பட்டதாக செய்தி வெளியானதும், ஆனந்தக் கண்ணீர் விட்டேன் என்று கூறும் நஸானின் (24) என்னும் இளம்பெண், 2022ஆம் ஆண்டு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின்போது ஈரான் அரசால் கொல்லப்பட்ட நிகா ஷக்கராமி, சரினா எஸ்மாயில்ஸாதே மற்றும் மாஷா ஆமினி ஆகியோருக்காக, அந்த செய்தி உண்மையாக இருக்கவேண்டும் என நான் ஆசைப்பட்டேன் என்கிறார்.

காமேனியின் மரணம்... மகிழ்ச்சியா சோகமா? ஈரான் மக்களின் மனநிலை | Mixed Emotions In Iranians For Ali Khamenei Death

அதேபோல, அந்த ஆர்ப்பாட்டங்களின்போது சுடப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ஒருவர், அந்த பிள்ளைகள் மார்பு, தலை மற்றும் அந்தரங்க உறுப்புகளில் கூட துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தார்கள் என்கிறார்.

காமேனி கொல்லப்பட்ட செய்தி கேட்டதும் தான் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கும் அவர், ’ நான் நிம்மதியாக, முதன்முறையாக ஒரு சிகரெட்டை புகைத்தேன், அது மிகச்சிறந்த ஒரு சனிக்கிழமை இரவு’ என்கிறார்.

அதே நேரத்தில், சில சதுக்கங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கருப்பு உடைகளுடன் கூடி கண்ணீருடன் காமேனிக்கு இரங்கல் நிகழ்ச்சிகள் நடத்தும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

காமேனியின் மரணம்... மகிழ்ச்சியா சோகமா? ஈரான் மக்களின் மனநிலை | Mixed Emotions In Iranians For Ali Khamenei Death

இன்னொரு பக்கமோ, ஒருவித அச்சம் உருவாகியுள்ளதையும் மறுப்பதற்கில்லை. வெளிநாட்டு சக்தி ஒன்று ஈரானின் தலைவரைக் கொல செய்ததைக் குறித்து மகிழ்ச்சி அடையமுடியவில்லை என்கிறார் ஒருவர்.

மேலும், அடுத்து ஈரானுக்கு என்ன நடக்குமோ என்ற அச்சமும் ஈரானியர்கள் பலரிடம் காணப்படுவதையும் மறுப்பதற்கில்லை!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *