குண்டு மழையால் தகர்க்கப்பட்ட ஈரான் உச்ச தலைவர் மாளிகை: இஸ்ரேல் வெளியிட்ட முக்கிய தகவல்

1 Min Read

ஈரானின் உச்ச தலைவர் மாளிகை மீது 30 குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

கொல்லப்பட்ட உச்ச தலைவர் அலி காமெனி

நேற்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்த்து கொல்லப்பட்டார்.

குண்டு மழையால் தகர்க்கப்பட்ட ஈரான் உச்ச தலைவர் மாளிகை: இஸ்ரேல் வெளியிட்ட முக்கிய தகவல் | Israel Hit Khamenei S Hqs With 30 Bombs

உச்ச தலைவர் அலி காமெனியின் குடியிருப்பு மற்றும் நிர்வாக வளாகத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல்(Wall Street Journal) வெளியிட்ட செய்தியில், 30 அதிநவீன குண்டுகளை இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பயன்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

திட்டமிட்ட தாக்குதல்

ஈரான் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலானது துல்லியமான உளவு தகவல்களுடன், நுணுக்கமாக திட்டமிட்ட தாக்குதல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஈரானின் மூத்த அரசியல் மற்றும் ராணுவ தலைவர்கள் குறிப்பிட்ட இந்த வளாகத்தில் ஒன்று கூடுவதை உளவுத்துறை அதிகாரிகள் முன்கூட்டியே கண்டறிந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

குண்டு மழையால் தகர்க்கப்பட்ட ஈரான் உச்ச தலைவர் மாளிகை: இஸ்ரேல் வெளியிட்ட முக்கிய தகவல் | Israel Hit Khamenei S Hqs With 30 Bombs

மேலும் இத்தகைய சந்திப்புகள் மூன்று முறை நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே இந்த தாக்குதல் திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

ஈரானின் அதிகார மையத்தை கட்டுப்படுத்துவதற்கு இது சரியான நேரமாக இருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே தாக்குதலுக்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *