இத்தாலியில் தடம் புரண்ட டிராம் வண்டி: மிலான் மேயர் முன்வைத்த குற்றச்சாட்டு

1 Min Read

இத்தாலியில் டிராம் வண்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

டிராம் விபத்து

இத்தாலியின் மிலான் நகரில் வேகமாக சென்ற டிராம் வண்டி ஒன்று கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் மிலான் நகரின் விட்டோரியோ வெனெட்டோ அவென்யூவில் நடந்த இந்த கோர விபத்தில் 49 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

9ம் எண் கொண்ட டிராம் வண்டி நேராக செல்வதற்கு பதிலாக மற்றொரு வழித்தடத்தில் திரும்பியதே இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

திருப்பத்தில் திரும்பும் போது கவிழ்ந்த டிராம் அருகில் இருந்த கட்டிடத்தில் மோதி விழுவது வீடியோ காட்சிகளில் பார்க்க முடிகிறது.

இத்தாலியில் தடம் புரண்ட டிராம் வண்டி: மிலான் மேயர் முன்வைத்த குற்றச்சாட்டு | Milan Tram Derailment 2 Dead 49 Injured

இந்த விபத்திற்கு டிராம் ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக இருக்கலாம் என்று அந்த நகரின் மேயர் பெப்பே சாலா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விபத்தில் காயமடைந்த 49 பேரில் யாரும் தற்போது மோசமான நிலைமையில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *