இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது ரகசிய ஊசிகளை பயன்படுத்தினோம்: சோயிப் அக்தர்

2 Min Read

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியின் போது ரகசிய ஊசி மருந்துகளை எடுத்துக் கொண்டதாக பாகிஸ்தானின் முன்னாள் வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

ரகசிய ஊசிகள் எடுத்துக் கொண்ட சோயிப் அக்தர்

1990 ம் ஆண்டுகளில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டிகள் சரிசமமான பலத்துடன் இரு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியாக இருக்கும்.

இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது ரகசிய ஊசிகளை பயன்படுத்தினோம்: சோயிப் அக்தர் | We Use Secret Injections While Playing Akhtar

இந்திய அணிக்கு எதிரான போட்டி என்றால் பாகிஸ்தான் வீர்ர்களுக்கு அதிக அழுத்தம்  இருப்பதோடு, அணியில் இருந்து நீக்கப்படாமல் இருக்க சில பாகிஸ்தான் வீரர்கள் ரகசிய மருத்துவச் சிகிச்சைகளுக்கும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

1998 மற்றும் 1999ம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தின் போது சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக சக வீரர் சக்லைன் முஷ்டாக்கும்( Saqlain Mushtaq), ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் சோயிப் அக்தரும்(Shoaib Akhtar) ரகசிய ஊசிகளை போட்டுக் கொண்டதாக அவரே தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இதனை வெளிப்படுத்திய அக்தர், கடுமையான வலியை மரத்துப் போக செய்து, கடுமையாக விளையாட உதவும் ஊசிகளையும், வலி நிவாரணி மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் இந்த விஷயங்கள் மூத்த வீரர்களுக்கு தெரிந்தால் சக்லைனை அணியில் இருந்து நீக்கி விடுவார்கள் என்றும், தான் ஏற்கனவே மூத்த வீரர்களின் கண்காணிப்பில் இருந்ததாகவும் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது ரகசிய ஊசிகளை பயன்படுத்தினோம்: சோயிப் அக்தர் | We Use Secret Injections While Playing Akhtar

பெரும்பாலான நேரங்களில் உடல் காயங்களை மறைத்து கொண்டு தான், தானும் சக வீரர் சக்லைன் முஷ்டாக்கும் விளையாடி வந்ததாகவும் அக்தர் தெரிவித்துள்ளார்./// அக்தரின் முழங்கால்கள் எப்போதும் வீங்கியும், நீர் கோர்த்தும் தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சக வீரர்களிடையே சுவாரஸ்யமான போட்டி

உடல் வலிகள் ஒருபுறம் இருந்தாலும் பாகிஸ்தான் அணியின் சக பந்துவீச்சாளர்கள் இடையே சுவாரஸ்யமான போட்டி ஒன்றும் இருந்து வந்தது.

அதாவது இந்திய அணிக்கு எதிரான போட்டியின் போது ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை யார் வீழ்த்துவது என்பது தான் எனவும் பேட்டியில் சோயிப் அக்தர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது ரகசிய ஊசிகளை பயன்படுத்தினோம்: சோயிப் அக்தர் | We Use Secret Injections While Playing Akhtar

2026 உலகக் கோப்பையில் பின்னடைவு

டி20 உலகக் கோப்பை 2026-ல் இருந்து பாகிஸ்தான் அணி தற்போது வெளியேறியுள்ளது.

இந்த நிலையில் பல்லேகலேயில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு, டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் நிலை குறித்து Game on Hai என்ற நிகழ்ச்சி ஒன்றில் சோயிப் அக்தர் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்.

கேப்டனாக சல்மான் அலி ஆகா நியமிக்கப்பட்டதை கேள்வி எழுப்பியதுடன், தற்போதைய பாகிஸ்தான் அணியில் போராடும் குணம் இல்லை என்றும் அக்தர் கடுமையாக சாடியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *