கரீபியன் பிரீமியர் லீக்கில் இலங்கையின் 5 வீரர்கள்

1 Min Read

இந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் மூன்று அணிகளில் இலங்கையின் ஐந்து வீரர்கள் ஆடவுள்ளனர்.

எதிர்வரும் ஓகஸ்ட் 7 தொடக்கம் செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் குசல் பெரேரா, அன்டிகுவா மற்றும் பார்புடா போல்கன்ஸ் அணிக்காக ஆடவிருப்பதோடு தசுன் ஷானக்க மற்றும் வனிந்து ஹசரங்க இருவரும் சென் கீட் மற்றும் நெவிஸ் பட்ரியோட்ஸ் அணியில் ஆட ஒப்பந்தமாகியுள்ளனர்.

அதேபோன்று நடப்புச் சம்பியனான சென் லூசியா கிங்ஸ் அணிக்காக மதீஷ பதிரண மற்றும் சரித் அசலங்க ஆகியோர் ஆடவுள்ளனர். இதேநேரம் இலங்கையில் பிறந்த கிரிக்கெட் வீரரான அம்ஷி டி சில்வா டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். எவ்வாறாயினும் டி சில்வா இந்தத் தொடரில் அமெரிக்க வீரராகவே இடம்பெற்றுள்ளார்.

கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வெளிநாட்டு வீரர்கள் விபரம் வெளியிடப்பட்டிருக்கும் நிலையிலேயே அதில் ஆடும் இலங்கை வீரர் தொடர்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *