வெனிசுலாவிலிருந்து 80 மில்லியன் பீப்பாய் எண்ணெய்- ட்ரம்ப் அறிவிப்பு

1 Min Read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது State of the Union உரையில், வெனிசுலாவிலிருந்து 80 மில்லியன் பேரல் எண்ணெய் அமெரிக்காவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான், அமெரிக்க பாதுகாப்புத் துறை, இந்தியப் பெருங்கடலில் வெனிசுலாவுடன் தொடர்புடைய மூன்றாவது எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்ததாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெனிசுலாவை புதிய நட்பு நாடாகவும் கூட்டாளியாகவும் எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், அமெரிக்க எண்ணெய் உற்பத்தி தினசரி 6 லட்சம் பீப்பாய் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

ஜனவரி மாதம், அமெரிக்க சிறப்பு படைகள் வெனிசுலா தலைவரான நிக்கோலஸ் மதுரோவை கடத்திச் சென்றது. அதன் பின்னர், வெனிசுலா எண்ணெய் துறையை Chevron, Exxon Mobil, ConocoPhillips போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு திறக்க திட்டமிட்டுள்ளனர்.

Trump Venezuela oil deal, US seized Venezuelan tanker, 80 million barrels oil Trump, Merey 16 crude Venezuela, US Venezuela oil sanctions #Trump #VenezuelaOil #USTankerSeizure #OilPolitics #EnergyCrisis #ClimateChange

பறிமுதல் செய்யப்பட்ட “Bertha” என்ற எண்ணெய் கப்பலில் 19 லட்சம் பீப்பாய் வெனிசுலா Merey 16 crude oil இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த எண்ணெய் கப்பல், Cook Islands, Curacao, சீன நிறுவனம் ஆகியவற்றின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்கா, அலாஸ்கா உள்ளிட்ட பல இடங்களில் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருகிறது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ட்ரம்ப் அரசின் எண்ணெய் சார்ந்த கொள்கைகள் மற்றும் பெரும் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மீது கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கரீபியன் தீவுகள், காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் புயல்களை சமாளிக்க, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *